சென்சார் சான்று வழங்க லஞ்சம் : தணிக்கை அதிகாரி கைது

http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-10-05/images/rajashekar-kadhal-solla-vandhen-28-07-10.jpg
அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் நடித்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய சென்சார் அதிகாரியை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி. இவர் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் காதல் சொல்ல வந்தேன். எஸ்3 பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் ஜெயக்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு சென்சார் சான்று பெறுவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சினிமா தணிக்கை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பினர். அப்போது சென்சார் சான்று வழங்க ரூ.1 லட்சம் வேண்டும் என்று தணிக்கை அதிகாரி ராஜசேகர் ‌லஞ்சம் கேட்டிருக்கிறார். முதல்கட்ட தவணையாக ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிபிஐ போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த சிபிஐ போலீசார் தணிக்கை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அட்வான்ஸ் லஞ்சப்பணத்தை கொடுப்பதற்காக தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ், தணிக்கை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அதிகாரி ராஜசேகரிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் தணிக்கை அலுவலகத்திலும், அதிகாரி ராஜசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

Comments

Most Recent