சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் 50 வயதைத் தாண்டிய ஒருவர்தான் ஹீரோ என கூறப்பட்டதல்லவா... அந்த 50 வயது நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளத...
சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் 50 வயதைத் தாண்டிய ஒருவர்தான் ஹீரோ என கூறப்பட்டதல்லவா... அந்த 50 வயது நடிகர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சினிமா தயாரிப்பாளரான ஏஎல் அழகப்பன்தான் அந்த 50 வயது ஹீரோ.
பெரிய விளம்பரம், பூஜை எதுவும் இல்லாமல் சிம்பிளாக படத்தின் பூஜையைத் துவங்கிய சசிகுமார், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட ஏரியாக்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.
பொதுவாக இந்த வயதில் முதல் முறையாக கேமராவுக்கு முன் நிற்பவர்கள் நிறைய டேக் வாங்குவார்களாம். ஆனால் அழகப்பன் அசத்துகிறாராம், ஒரு தொழில்முறைக் கலைஞரைப் போல.
இந்தப் படத்துக்கு முதலில் நகரம் என்று பெயரிட்டிருந்தார் சசிகுமார். ஆனால் பின்னர் அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இப்போதைக்கு பெயரில்லாமலேயே உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, சென்னை நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம்.
படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விக்ரம். கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டும் எண்ணமுள்ளதாம். ஆனால் இயக்குநர் சசிகுமார் கடைசிவரை இந்தப் படத்தின் எந்தக் காட்சியிலும் தோன்றுவதில்லை என முடிவு செய்துள்ளாராம்.
Comments
Post a Comment