பிரகாஷ்ராஜுக்கு சாந்தாராம் விருது!



காஞ்சீவரம் படத்தில் சிறப்பாக நடித்த பிரகாஷ்ராஜுக்கு இந்த ஆண்டின் சாந்தாராம் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் பிரியதர்ஷனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், ஒளிப்பதிவு செய்த திருவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாளியான அமரர் வி சாந்தாராமின் பெயரில் ஆண்டு தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

'ராஜ்கமல் அகாடமி ஆஃப் சினிமாடிக் எக்ஸெலன்ஸ்' எனும் அமைப்பு மூலம் வழங்கப்படும் இந்த விருதுகள் தேசிய அளவில் மிகுந்த மதிப்பு மிக்கதாகப் பார்க்கப்படுகிறது.

2008-ம் ஆண்டுக்கான சாந்தாராம் விருதுக்கு, தமிழில் பிரிதர்ஷன் இயக்கத்தில் வெளியாக சர்வதேச விருதுகள் பல வென்ற காஞ்சீவரம் தேர்வு செய்யப்பட்டது.

இந்தப் படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என மூன்று விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. மும்பையில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Comments

Most Recent