அருண்விஜய் துணிச்சல் புகார்



நான் நடிக்க துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என நடிகர் அருண் விஜய் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் அருண் விஜய் அளித்துள்ள புகார்:

"2004ம் ஆண்டில் என்னை வைத்து தொடங்கப்பட்ட படம், 'துணிச்சல்.' இந்த படம் முடிவடையாமல் இருந்தது. நான் அந்த படத்துக்கு, 'டப்பிங்' பேசவில்லை. ஆனால், 'துணிச்சல்' படம் வருகிற வெள்ளிக் கிழமை ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. என் குரல் இல்லாமலே அந்த படம் திரைக்கு வருவதாக கேள்விப்படுகிறேன்.

நான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'மலை மலை' படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தவறாக பயன்படுத்தி, 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டுவருவதாக அறிகிறேன். என் குரல் இல்லாமல், 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டு வரக்கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும்.

'மலை மலை' படத்தை அடுத்து நான் நடித்து வரும் படம், 'மாஞ்சா வேலு'தான் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...'', என்று அருண் விஜய் கூறியுள்ளார்.

Comments

Most Recent