கமல்- கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. தசாவதா...
கமல்- கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தசாவதாரத்துக்குப் பின் கமல்- ரவிக்குமார் இணையும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படவேலைகள் படு ரகசியமாக நடந்து வருகின்றன.
கமல் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. தமன்னாவை முதலில் பரிசீலித்தனர். ஆனால் பிரபு தேவாவின் படு ஸ்ட்ராங்கான சிபாரிசு காரணமாக, இப்போது நயன்தாராவை கமல் ஜோடியாக்க முடிவு செய்துள்ளனராம்.
பிரபு தேவா சிபாரிசு மட்டுமல்லாமல், நயன்தாராவுடன் தனக்குள்ள தனிப்பட்ட நெருக்கம் காரணமாகவும், அவரை இந்தப் படத்தில் போட முடிவு செய்துவிட்டாராம் ரவிக்குமார். கமலும் இதற்கு சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது. மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
Comments
Post a Comment