பா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் இளையராஜா!



பா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

அமிதாப் பச்சன் புரோகிரியா என்ற நோயால் தாக்கப்பட்ட 12 வயது சிறுவனாக நடித்துள்ள படம் பா.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பா, திரையிட்ட இடங்களிலெல்லாம் நல்ல பெயரையும், வசூலையும் பெற்று வருகிறது.

சென்னையிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இளையராஜா இசையமைத்த 884வது படம் இது. பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தப் படத்தை படத்தின் தமிழ் உரிமையையும் இளையராஜாவே பெற்றுள்ளார்.

காதல், காமம், வன்முறை என எந்த வழக்கமான மசாலாவும் இல்லாத இந்த மாதிரி படங்கள்தான் நல்ல சினிமாவுக்கு விதையாய் அமையும் என்று பாராட்டிய ராஜா, இப்போது தமிழில் தரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கலைஞானி கமல்ஹாஸனிடம் இதுகுறித்து இளையராஜா பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை இந்தியில் இயக்கிய பால்கி அல்லது படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிசி ஸ்ரீராம் இருவரில் ஒருவரை இயக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

இந்தப் படத்தை தமிழில் எடுப்பது குறித்து முதலிலிருந்தே ரஜினியும் ஆர்வம் காட்டி வருகிறார். எனவே அவரிடமும் பேச இளைய ராஜா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியில் எடுக்கப்பட்ட பா பட்ஜெட் 15 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent