டெலி சிப்ஸ்



"3 இடி​யட்ஸ்' படத்​துக்​காக வித்​தி​யா​ச​மான கேம் ஒன்றை ஆரம்​பித்து இருக்​கி​றார் அமீர்​கான்.​ இந்​தி​யா​வின் முக்​கி​ய​மான நக​ரங்​க​ளில் உள்ள தியேட்​டர்​க​ளுக்கு வெவ்​வேறு கெட் அப்​பு​க​ளில் செல்​லும் அமீரை கண்​டு​பி​டிக்​கும் ரசி​க​ரு​டன் அந்த தியேட்​ட​ரிலே அமர்ந்து படம் பார்க்க போகி​றா​ராம்.

மாத​வ​னு​டன் ஏர்​செல் விளம்​ப​ரத்​தில் சினே​கம் பேசிய வித்​யா​பா​லன் "பா' படத்​துக்​குப் பின்​னும் விளம்​ப​ரங்​க​ளில் நடிக்க ஆர்​வம் காட்​டு​கி​றா​ராம்.​ "பா' படத்​தின் மெகா ஹிட்​டுக்​குப் பின் விளம்​ப​ரத்​துக்​கான சம்​ப​ளத்தை ஏற்றி விளம்​பர கம்​பெ​னி​க​ளுக்கு அதிர்ச்​சி​யும் கொடுத்​தி​ருக்​கி​றா​ராம் வித்​யா​பா​லன்.

விஜய் டி.வி.யின் "நடந்​தது என்ன?​' நிகழ்ச்​சி​யில் பத்து துறை​க​ளைச் சேர்ந்த நிபு​ணர்​கள் கலந்​துக் கொண்டு துறை சார்ந்த இந்​தாண்டு நிகழ்​வு​களை விளக்​கப் போகி​றார்​க​ளாம்.​ இதில் சினிமா,​​ அர​சி​யல்,​​ சமு​கம்,​​ பொது நலம் என பல்​வேறு தலைப்​பு​க​ளில் விவா​தம் நடை​பெ​று​கி​றது.​ ​ இந்​நி​கழ்ச்சி டிசம்பர்​ 31}ம் தேதி இரவு ஒளி​ப​ரப்​பா​கி​றது.

தயா​நிதி அழ​கிரி தயா​ரிக்​கும் தமிழ் படத்​தில் கஸ்​தூரி ரீ எண்ட்ரி கொடுக்​கி​றார்.​ "மாஞ்சா வேலு' உள்​ளிட்ட சில படங்​க​ளில் கமர்​ஷி​ய​லாக வந்து போன கஸ்​தூரி,​​ இந்த படத்​துக்​காக கவர்ச்சி நட​னம் ஆடி​யி​ருக்​கி​றா​ராம்.​ பத்​தி​ரி​கை​யா​ளர் சந்​திப்பு உள்​ளிட்ட இடங்​க​ளில் கஸ்​தூ​ரி​யின் கவர்ச்​சி​யைச் சொல்லி பெரு​மை​ய​டித்​துள்​ளது படக்​குழு.

ஜீ டி.வி.யின் தமிழ் பதிப்பு 24 மணி நேர செய்​தி​சே​ன​லாக்​கப்​ப​டும் எனத் தெரி​கி​றது.​ 5 வரு​டங்​க​ளுக்கு முன் ஆரம்​பித்து நிறுத்​தப்​பட்ட ஜீ டி.வி.யின் தமிழ் பதிப்பு,​​ சமீப காலத்​தில்​தான் புதுப் பொலிவு பெற்​றது.​ மீண்​டும் நிறுத்​தத்​துக்கு உள்​ளாகி செய்தி சேன​லாக உரு​மா​று​கி​றது.​ இதை​ய​டுத்து மியூ​சிக் சேனல் ஒன்​றை​யும் ஆரம்​பிக்​கும் முயற்​சி​யில் இறங்​கப் போகி​ற​தாம்.

எஸ்.எஸ்.​ மியூ​சிக் தொகுப்​பா​ளினி வேலைக்​குப் பின் தெலுங்கு சினி​மாக்​க​ளில் நடித்து வரு​கி​றார் லேகா வாஷிங்​டன்.​ தமிழ் சினி​மா​வின் புறக்​க​ணிப்​பு​தான் மலை​யா​ளக் கரை​யோ​ரம் லேகா ஒதுங்க கார​ணம்.​ இப்​போது ஸ்ரேயா மற்​றும் ரீமா​வு​டன் நெருங்​கிய தொடர்​பில் உள்ள லேகா​விற்கு சில வாய்ப்​பு​க​ளுக்கு சிபா​ரிசு செய்​துள்​ளார்​க​ளாம் தோழி​யர் .

2010 பிறப்​ப​தற்கு முதல் நாள் இரவு தமன்​னா​வின் நட​னத்தை ரூ 2 கோடிக்கு விலை பேசி​யி​ருந்​த​தாம் சென்​னை​யின் பிர​ப​ல​மான ஸ்டார் ஹோட்​டல்.​ சினி​மா​வின் நம்​பர் ஒன் நாயகி என்ற எதிர்​பார்ப்பு எகி​றி​யி​ருப்​ப​தால்,​​ ஸ்டார் ஹோட்ட​லின் அழைப்பை நிரா​க​ரித்து விட்டு,​​ ஹைத​ரா​பாத்​தில் எளிய முறை​யில் புது வரு​டத்தை வர​வேற்​கப் போகி​றா​ராம் தமன்னா.

இந்த வரு​டத்​துக்​கான சினிமா விரு​து​களை வழங்​கி​யி​ருக்​கி​றது ஜெயா டி.வி.​ "வர்​ண​ஜா​லம்' என்ற பெய​ரில் நடந்த இவ்​வி​ழா​வில்,​​ அபி​நயா ​(நாடோ​டி​கள்)​,​​ ஷம்மு ​(காஞ்​சி​வ​ரம்)​,​​ நா.முத்​துக்​கு​மார் ​(சிவா மன​சுல சக்தி)​ சுசீந்​தி​ரன் ​(வெண்​ணிலா கபடி குழு)​ எனப் பல​ருக்கு விருது வழங்கி கௌ​ர​வித்​தி​ருக்​கி​றது.

சன் டி.வி.யோடு பத்து ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளார் ராதிகா.​ ரேடான் மீடியா ஆரம்​பித்து சீரி​யல்​களை தயா​ரித்து நடிக்க துவங்​கிய ராதி​கா​வின் வெற்றி "சித்தி',​ "அரசி',​ "செல்வி' என நீள்​கி​றது.​ இந்த பட்​டிய​லில் இன்​னும் 2 சீரி​யல்​களை சன் டி.வி.க்காக களம் இறக்க காத்​தி​ருக்​கி​றா​ராம்

Comments

Most Recent