ஏ.ஆர்.ரஹ்​மான் காலண்​டர் வெளி​யீடு


இசை​ய​மைப்​பா​ளர் ஏ.ஆர்.ரஹ்​மான் அறக்​கட்​ட​ளை​யின் நிதி​யு​த​விக்​காக,​​ அவ​ரு​டைய அரிய புகைப்​ப​டங்​க​ளு​டன் கூடிய 2010}ம் ஆண்டு காலண்​டர் வெளி​யி​டப்​ப​டு​கி​றது.​

ஏ.ஆர்.ரஹ்​மான் அறக்​கட்​டளை,​​ தற்​போது சென்னை மாந​க​ராட்​சிப் பள்​ளி​யில் பயி​லும் 30 மாண​வர்​க​ளுக்கு இல​வச இசைக் கல்​வி​யைப் பயிற்​று​வித்து வரு​கி​றது.​ வரும் ஆண்டி​லி​ருந்து மேலும் அதிக எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு இசைக் கல்​வி​யைப் பயிற்​று​விக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளது.​

இதற்கு நிதி சேர்க்​கும் வகை​யில் ஆடியோ மீடியா எஜு​கே​ஷன் நிறு​வ​னத்​தின் துணை நிறு​வ​ன​மான வேர்ல்​டு​வைடு நிறு​வ​னம் இந்த காலண்​டரை வெளி​யி​டு​கி​றது.​ இந்த காலண்​டர் }​ இசை,​​ மொழி,​​ காதல் ஆகி​ய​வற்றை தலைப்​பு​க​ளா​கக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்​மா​னின்​மேற்​கோள்​க​ளு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ இந்த காலண்​ட​ரைப் பெற   www.arr​ahm​an.com ​ என்ற இணை​ய​த​ளத்​தைத் தொடர்​பு​கொள்​ள​லாம்.

Comments

Most Recent