'அடப்பாவி... எப்படி கவுந்தான் இந்தாளு' என்று படிப்பவர்கள், கேள்விப்படுபவர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு சீரும் சிறப்புமாக நடந்து மு...
'அடப்பாவி... எப்படி கவுந்தான் இந்தாளு' என்று படிப்பவர்கள், கேள்விப்படுபவர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்துவிட்டது ரம்பா நிச்சயதார்த்தம்.
இதுவரை மணமகன் புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்த ரம்பா, ஒருவழியாக இவர்தான் மாப்பிள்ளை என்று ஒரு தமிழ் தொழிலதிபரைக் காட்டியுள்ளார். அவர்தான் இந்திரன். கனடாவில் மேஜிக்வுட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்துபவர். இதன் தொழிற்சாலை இந்தியாவில், சென்னையில் உள்ளது.
விளம்பரத் தூதராக ரம்பாவை ஒப்பந்தம் செய்தார் இந்திரன்... ரம்பாவோ அவரை வாழ்க்கைத் துணைவராகவே ஒப்பந்தம் செய்து அன்லிமிடட் கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இவர்களின் நிச்சயதார்த்தம் சென்னை அடையாறு கேட் ஹோட்டலில் நடந்தது.
நிச்சயதார்த்தத்துக்கு இந்திரன் அளித்த வைர மோதிரத்தின் விலை ரூ 1 கோடிக்கும் அதிகம் என்பதுதான் கோடம்பாக்க நடிகைகளை வாய்பிளக்க வைத்துள்ளது (இந்திரனை ரம்பா பொத்தி வைத்ததன் ரகசியம் இதுதானோ!).
தானும் இந்திரனுக்கு சளைத்தவரல்ல என்பதைக் காட்டும் விதமாக வைர மோதிரம் பரிசளித்தாராம் ரம்பா.
மார்ச் 27ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் கல்யாணம் நடக்கிறது. திரையுலகில் ரொம்ம்ப செலக்டிவாக மட்டுமே ஆட்களை அழைக்கப் போகிறார்களாம். கண்டிப்பாக பத்திரிகையாளர்கள் யாரும் பங்கேற்கக் கூடாதாம்.
நல்லாருந்தா சரி!

Comments
Post a Comment