தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் பாலா - நான் கடவுளுக்கு 2 விருது



டெல்லி: இயக்குநர் பாலா மீண்டும் ஒரு முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். நான் கடவுள் படத்துக்காக சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது அவருக்குக் கிடைத்துள்ளது. நான் கடவுள் படம் மொத்தம் 2 விருதுகளைத் தட்டியுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டன.

தேசியஅளவில் சிறந்த இயக்குநராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார். நான் கடவுள் படத்துக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

சிறந்த மேக்கப் கலைஞருக்கான விருது மூர்த்திக்குக் கிடைத்துள்ளது. இதுவும் நான் கடவுள் படத்துக்காக திடைத்து்ளது.

சிறந்த தமிழ்ப் படமாக வாரணம் ஆயிரம் தேர்வாகியுள்ளது.

சிறந்த நடிகராக ஜோகுவா என்ற மராத்திப் படத்தில் நடித்த உபேந்திராவும், சிறந்த நடிகையாக பேஷன் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவும் தேர்வாகியுள்ளனர்.

தேசிய அளவில் சிறந்த படமாக அந்தாஹீன் தேரவாகியுள்ளது. சிறந்த பாப்புலர் படமாக ஓயே லக்கி லக்கி ஓயே தேர்வாகியுள்ளது.

சிறந்த துணை நடிகராக அர்ஜூன் ராம் பால் (ராக் ஆன்), சிறந்த துணை நடிகையாக கங்கணா ரனவத் (பேஷன்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Most Recent