சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரை நடனத்திலும் சிறந்தவர்கள் என நிரூபித்து, நேயர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற விஜய் டி.வி.யின் "ஜோடி நம்ப...
சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரை நடனத்திலும் சிறந்தவர்கள் என நிரூபித்து, நேயர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற விஜய் டி.வி.யின் "ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியின் 4}ம் பகுதி வெள்ளிக்கிழமை (ஜன.29) முதல் ஒளிபரப்பாகிறது."ஜோடி நம்பர் ஒன் } சீசன் 4' என்ற இந்த புதிய நிகழ்ச்சியில் 9 நட்சத்திர ஜோடிகளுக்கிடையே கடுமையான நடனப் போட்டி நடைபெறுகிறது. இதில் வாரம்தோறும் ஒரு சர்வதேச நடனக் கலை நிகழ்ச்சி, ஒரு எலிமினேஷன், வைல்டு கார்டு சுற்று என பல புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.நான்காவது பகுதியின் முக்கிய சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் நேரடி வாக்கெடுப்பு, நட்சத்திர நடனங்கள், நட்சத்திர நடுவர்கள், பிரபல தொகுப்பாளர்கள் என சுவாரஸ்யமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வெல்லும் ஜோடிக்கு பல லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.நடனப் போட்டி நிகழ்ச்சியினூடே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கும் நேயர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.முந்தைய மூன்று பகுதிகளை விட சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெறவுள்ள "ஜோடி நம்பர் ஒன் } சீசன் 4' நிகழ்ச்சி, ஜனவரி 29 முதல் வாரம்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
Comments
Post a Comment