பெங்களூர்: அமிதாப் பச்சன் நடித்துள்ள 'பா' இந்தி திரைப்படத்திற்கான கேளிக்கை வரியில் 50 சதவீதம் விலக்கு அளிப்பதாக கர்நாடக மாநிலம் அறிவ...
பெங்களூர்: அமிதாப் பச்சன் நடித்துள்ள 'பா' இந்தி திரைப்படத்திற்கான கேளிக்கை வரியில் 50 சதவீதம் விலக்கு அளிப்பதாக கர்நாடக மாநிலம் அறிவித்துள்ளது.
இத் திரைப்படத்தில் உள்ள சமுதாயக் கருத்தை மனதில் வைத்தும், ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் கேட்டுக்கொண்டதன் பேரிலும் இந்த வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே குஜராத்தில் முதல்வர் நரேந்திரமோடியை அமிதாப் பச்சன் சந்தித்து பேசிய பின்னர், அம்மாநிலத்தில் 'பா' படத்திற்கு கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment