அமிதாப்பச்சனின் பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு



அகமதாபாத்: சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகியுள்ள பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

காந்தி நகர் வந்த அமிதாப் பச்சன், முதல்வர் நரேந்திர மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பா திரையீட்டில் கலந்து கொண்டார். அப்போது மோடியை அவர் வெகுவாக பாராட்டினார். மேலும் குஜராத் அரசு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. அதை பிரபலப்படுத்த பிராண்ட் அம்பாசடராக செயல்படவும் தயார் என்றும் அறிவித்தார்.

கூடவே, பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந் நிலையில் தற்போது பா படத்துக்கு குஜராத் அரசு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் முதன்மைச் செயலாளர், நிதி செயலாளர், இளைஞர் மற்றும் கலாச்சாரத் துறை ஆணையர் ஆகியோர் கொண்ட கமிட்டி அமிதாப்பச்சனின் கோரிக்கையைப் பரிசீலித்து வரி விலக்கு அளிக்கலாம் என அரசுக்குப் பரிந்துரைத்தது. இதையடுத்து வரி விலக்கு அளித்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments

Most Recent