லேட்டா வந்தார், லேட்டஸ்ஸாப் போனார் ரஜினி!

"லேட்டா வந்தாலும், லேட்டஸ்ஸா வருவேன்" என்பது ரஜினியின் பிரபலமான பஞ்ச் டயலாக்குகளில் ஒன்று. இன்று அதை அவர் நிஜமாவே சொல்வது போல் ஆகியது. சென்னை விமான நிலையத்திற்கு காலதாமதமாகச் சென்றதால் நடிகர் ரஜினிகாந்த் அவர் பயனணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் திருவனந்தபுரம் செல்வதற்காக இன்று காலை 9.30 மணியளவில் தனியார் விமானம் ஒன்றில் செல்ல இருந்தார்.

இதற்காக அவர் இன்று காலை 9.25 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் செல்ல வேண்டிய விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிவிட்டதால் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்ததாக கூறப்படுகின்றது.

அப்போது , ரஜினி அந்த விமானத்தில் ஏற சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் டிக்கட் புக் செய்த விமானத்தில் செல்ல முடியவில்லை.

இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு மற்றொரு தனியார் விமானத்தில் சென்றார்.

விமானத்திற்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் போர்டிங் பாயிண்ட்டுக்கு செல்ல முடியதாதால் அவரை விமானத்தில் ஏற்ற அந்த நிறுவனம் மறுத்ததாக கூறப்படுகிறது.

Comments

Most Recent