நடிகை ரம்பா நிச்சயதார்த்தம்... நாளை நடக்கிறது!



நடிகை ரம்பாவுக்கும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.

சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த நிச்சயதார்த்தம் நடக்கிறது.

சர்க்கம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரம்பா.

சுந்தர புருஷன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், நாம் இருவர் நமக்கு இருவர், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து பெரிய ரவுண்டு வந்தார்.

சொந்தப் படம் எடுத்து நஷ்டம் கண்ட அவர், பின்னர் போஜ்புரி படங்களில் நடித்தார்.

இப்போது மீண்டும் தமிழில் சில படங்களில் நடிக்கிறார்.

இந் நிலையில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்றின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமான ரம்பா, அந்த நிறுவன அதிபரையே திருமணம் செய்கிறார்.

அந்த தொழிலதிபர் பெயர் இந்திரன். இவர்கள் திருமணம், சென்னையில் வருகிற ஏப்ரல் மாதம் நடக்கிறது.

அதற்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

Comments

Most Recent