பொங்கல் ஜல்லிகட்டில் மல்லுகட்டும் படங்கள்!

ஆயிரத்தில்  ஒருவன்

பருத்தி வீரனுக்குப்  பிறகு கார்த்திக் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கசெய்திருக்கும் படம். இவருக்கு இரண்டு ஹாட் நாயகிகளான ரீமாசென், ஆண்ட்ரியா ஜோடி. பார்த்திபன் முதல் முறையாக வில்லனாக நடித்துள்ளார். செல்வராகவன் டைம் மெஷின் கருத்தாக்கதை மையமாகக் கொண்டு பல ஆங்கிலப்படங்களின் பாதிப்பில் இயக்கியுள்ளார். ட்ரீம்வேலி கார்ப்பரேஷன் சார்பில் ரவீந்திரன் தயாரித்துள்ளார். இசை, ஜி.வி. பிரகாஷ்குமார். பட்ஜெட் 32 கோடி.

ஆராய்ச்சிக்காக காட்டுக்குள் நுழையும் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர், பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய காலத்துக்குள் செல்வது போல அமைக்கபட்டுள்ள திரைகதையும் பிரமாண்டமும் தமிழ்ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையலாம்.

குட்டி

தனுஷ், ஸ்ரேயா ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் படம். யாரடி நீ மோகனி படத்தில் தனுஷை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் இயக்கியுள்ளார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரிப்பு. தெலுங்கில் ஹிட்டான ஆர்யா படத்தின் ரீமேக்.  பட்ஜெட் 6 கோடி. கல்லூரி மாணவரான தனுஷ், ஸ்ரேயாவை காதலிக்கிறார். ஸ்ரேயா மற்றொரு மணவரை காதலிக்கிறார். தனுஷின் ஒருதலைக் காதல் என்ன ஆனது என்பதுதான் திரைக்கதை. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் இப்போதைக்கு ஹிட்.

ஜக்குபாய்:

ஃபைனல் மிக்ஸ் செய்வதற்கு முன்புள்ள பிரதி  இணையத்தில் வெளியாகிவிட, ரிலீசுக்கு முன்பே பைரேட் ஆன முதல் தமிழ்  படம் என்ற அளவில் கூடுதல்  விளம்பரம். படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி இரக்கப்பட்டு வாங்கியிருக்கிறது. சரத்குமார்-கே.எஸ். ரவிக்குமார் டீம் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்து மிரட்டியிருக்கும் படம். இதில் சரத்குமாரின் மகளாக ஸ்ரேயா நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் படிக்கும் மகளை பார்க்க செல்கிறார் சரத். அங்கு தனது பழைய எதிரிகளால் மகளுக்கு ஆபத்து. அதிலிருந்து மகளை சரத் மீட்பது கதை. சரத்தின் துனைவியார் ராதிக்கவின் ராடன் நிறுவனம் தயாரித்துள்ளது. பட்ஜெட் 12 கோடி.


நாணயம்

கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி. சரண் தயாரித்துள்ள படம். அஞ்சாதே படத்தில்  வில்லனாக நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் அள்ளினார் பிரசன்னா. இதில் அந்த வேலையைச்செய்யும் இளம் ஹீரோ சிபிராஜ். மிஷ்கின் உதவியாளர் சக்தி ராஜன் இயக்கியுள்ளார். இசை, வசந்தபாலன். வங்கி ஒன்றை திட்டமிட்டு கொள்ளையடிப்பதுதான் கதை. அதை த்ரில்லுடன் சொல்கிறது படம். வங்கி அதிகாரியாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்துள்ளார்.

போர்க்களம்

தாய்லாந்தில்  டைரக்‌ஷன் கோர்ஸ் படித்து திரும்பிய பண்டி சரோஜ் குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள படம். மற்ற படங்களைப் போல் இல்லாமல், படத்தில் காட்சி அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்.

இதற்க்காக அதிநவீன கருவிகளை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். 'டைட்டானிக்', 'இன் டு த வேல்டு', 'பேர்ல் ஹார்பர்' போன்ற ஆங்கிலப் படங்களில் பயன்படுத்திய "ஸ்டிராடா" என்ற நூறு அடி நீளம் கொண்ட கிரேன், முதன் முறையாக 'போர்க்களம்' படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி பல தொழி நுட்பச் சிறப்புக்கள் பட்த்துக்கு உண்டு. பட்ஜெட் 6 கோடி. 'பொல்லாதவன்' படத்தில் வில்லனாக நடித்த கிஷோர் இப்படத்தில் நாயகன். நாயகி புதுமுகம் ஸ்மித்தா. நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சத்யன், இப்படத்தில் முதல்முறையாக குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். ஒரு சாமாணியனை காதல் மாவீரன் ஆக்குவதுதான் திரைக்கதை. எதிர் பார்ப்பை கூட்டியிருக்கும் படம்.

Comments

Most Recent