நான் கடவுள் படம் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற பாலா இன்று மாலை தனது புதிய படத்தை அறிவிக்கிறார். இந்தப் படத்துக்கு 'அவன் இவன்' ...
நான் கடவுள் படம் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற பாலா இன்று மாலை தனது புதிய படத்தை அறிவிக்கிறார்.
இந்தப் படத்துக்கு 'அவன் இவன்' என்று பெயர் சூட்டியுள்ளார் பாலா.
ஆர்யா, விஷால் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நந்தா படத்துக்குப் பிறகு யுவனுடன் கைகோர்க்கிறார் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. பாலாவின் பிற படங்கள் அனைத்திலும் இளையராஜாதான் இசையமைத்தார்.
இந்தப் படத்தின் நாயகியாக ஜனனி அய்யர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார்.
நான் கடவுள் படத்தில் ஜெயமோகனுடன் கைகோர்த்த பாலா, இந்தப் படத்தில் இன்னொரு பிரபல எழுத்தாளருடன் இணைகிறார். அவர் எஸ் ராமகிருஷ்ணன்.
இவர் ஏற்கெனவே பல படங்களில் வசனமெழுதி முத்திரைப் பதித்தவர். இலக்கிய உலகில் தனக்கென்று தனி வட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர்.
இந்தப் படம் வழக்கமான பாலா படமாக இல்லாமல், முற்றிலும் புதிய வடிவில் இளைஞர்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கும் படமாக இருக்கும் என பாலா குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் வெறும் கூத்தடிப்பாக இல்லாமல், இளம் தலைமுறைக்கு புதிய செய்தி ஒன்றும் இந்த இளமைத் திருவிழாவில் நிறைந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
இப்படத்தைத் தயாரிப்பவர் கல்பாத்தி அகோரம். படத்தின் பி.ஆர்.ஓவாக செயல்படுகிறார் நிகில் முருகன்.
Comments
Post a Comment