திருமணத்திற்கு பின்பு நான் மும்பைவாசி ஆகிவிடுவேன். முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிடுவேன் என்கிறார் நடிகை நவ்யா நாயர். பிரபல தமிழ்- மல...
திருமணத்திற்கு பின்பு நான் மும்பைவாசி ஆகிவிடுவேன். முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிடுவேன் என்கிறார் நடிகை நவ்யா நாயர்.
பிரபல தமிழ்- மலையாள நடிகை நவ்யா நாயர். அழகிய தீயே மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.
இவருக்கும் கேரள மாநிலம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த சந்தோஷ் மேனனுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எம்.பி.ஏ. பட்டதாரியான சந்தோஷ் மேனன், மும்பையில் உள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில், துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமணம் வருகிற ஜனவரி 21ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள சேப்பாடு என்ற இடத்தில் கேரள முறைப்படி நடக்கிறது. சங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
திருமணத்திற்கு பிறகு கணவருடன் மும்பையில் செட்டில் ஆகிவிட நவ்யா முடிவு செய்துள்ளார். இதுபற்றி நவ்யா நாயர் கூறுகையில்,
'திருமணத்திற்கு பின்பு நான் மும்பைவாசி ஆகிவிடுவேன். முழுக்க முழுக்க குடும்ப பெண்ணாக மாறிவிடுவேன். ஓய்வு நேரத்தை படிப்பில் செலவிடுவேன்.
திருமணத்திற்கு பின் மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தால் அதை பயன்படுத்திக் கொள்வேன். திருமணத்திற்கு பின்பும் நடிப்பை கைவிட மாட்டேன் என்றார்.
Comments
Post a Comment