நமது இயக்கத்தின் பணி சமூகசேவைகளில் ஈடுபடுவது மட்டுமே. இத்தகைய பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே நமது இயக்கத்தின் ...
நமது இயக்கத்தின் பணி சமூகசேவைகளில் ஈடுபடுவது மட்டுமே. இத்தகைய பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே நமது இயக்கத்தின் பொறுப்பாளர்களாக இருக்க தகுதி உள்ளவர்கள். எனது முடிவே இறுதியானது என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் எச்சரிக்கை கலந்த அறிவுரையைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
என்னுடைய கலைப்பயணத்தில் கடந்த பதினெட்டு வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த என் "அசல்" ரசிகர்களுக்கு வணக்கம் கலந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
உங்கள் ஆதரவும் ஊக்கமும் சோதனையான காலகட்டத்திலும் எனக்கு ஊட்டமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
'அசல்'படத்தின் படப்பிடிப்பு உட்பட என் பணிகள் நிறைவு பெற்று என்னுடைய 50 -வது படத்தின் தொடக்க பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நான் கடந்த சில மாதங்களாக எனது அகில இந்திய அஜீத்குமார் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் என்னுடைய செயலாளரும்,நமது இயக்கத்தின் தலைமை நிர்வாகி சுரேஷ் சந்திரா வாயிலாக பணிகளை மேற்கொண்டிருக்கிறேன்.
ஒருபடத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் பங்கு இன்றியமையாததாக இருப்பினும் அந்த பங்களிப்பு திரைப்படம் நல்ல முறையில் தரத்துடன் வெளிவந்தால் மட்டுமே என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
அத்தகைய திரைப்படம் உருவாக திரைக்கு முன்னால் என்னை போன்ற நடிகர்களும் திரைக்குப்பின்னால் உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்க ளின் உழைப்பும்,தயாரிப்பாளர்களின் மூலதனமும், நேரமும் உள்ளடக்கியது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
இதைக் கருத்தில் கொள்ளாமல் படப்பிடிப்பு தளங்களில் தொழில் இடையூறு செய்வது வருத்தத்திற்குரியது. என்னை பொருத்தவரை என் ரசிகர்களுக்கு கண்ணியமும், கட்டுப்பாடும் மிக அவசியம் என்பதை பலமுறை வலுயு றுத்தி இருக்கிறேன்.
ஆனால் நமது இயக்கத்தின் எனது கட்டளைக்கு ஏற்ப நடைபெற்றுக்கொண்டிருக்கும் சீரமைப்பு பணிகளை குலைக்க, சுயவிளம்பரத்திற்காக ஒரு சிலர் தலைமை நிர்வாகத்திற்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவதாகவும், தலைமையின் அனுமதி இன்றி ஊடங்கங்கள் வாயிலாக கருத்து தெரிவிப்பதாகவும், தொலைபேசி மூலமாகவும்,தலைமை நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் எனக்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே நம்மை பற்றிய அருவருப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். பொதுமக்களுக்கு இன்னல்கள் விளைவிப்பதோ,சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் செய்வதையோ நான் என்றுமே அனுமதித்ததில்லை, அனுமதிக்கவும் மாட்டேன்.
இச்செயல்களில் ஈடுபடுவோர் யாராயிருந்தாலும் அவர்களது அனுபவம்,இயக்கத்தில் வகித்து வரும் பொறுப்பு எதுவாயிருப்பினும், அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதையும் நீங்கள் அறிக.
நமது இயக்கத்தின் பணி சமூகசேவைகளில் ஈடுபடுவது மட்டுமே. இத்தகைய பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் மட்டுமே நமது இயக்கத்தின் பொறுப்பாளர்களாக இருக்க தகுதி உள்ளவர்கள்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாவட்ட பதவிகள் பரிசீலிக்கப்படும் என்பதையும், நிரந்தர பதவி என்பது செயல்பாடுகளை ஒட்டி நடக்கும் ஒரு நிகழ்வே. சுழற்சி முறையில் தகுதியுள்ள புதிய நிர்வாகிகள் மாவட்ட அளவில் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் மூலம் நமது இயக்கத்தின் ரசிகர்களிடையே ஒரு செயல்மனப்பான்மை ஏற்படும் என்பதே என் கருத்து.
நமது இயக்கத்தின் சீரமைப்பு பணிகள் முழுவதுமே எனது கட்
டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பதையும் நமது இயக்கத்தின் மாநில நிர்வாகி சுரேஷ்சந்திரா அவர்கள் என்னுடைய எண்ண ஓட்டத்தை தான் செயல்படுத்துகிறார் என்பதையும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறேன்.
என் முடிவே இறுதியானது, உறுதியானதும் கூட.
காலம் மாறிவருகிறது.நாமும் மாறுவோம் அதற்கேற்றார் போல...
Comments
Post a Comment