ஆறு கெட்டப்களில் மாதவன்



தீன் பட்டி இந்திப் படத்தில் ஆறு விதமான கெட்டப்களில் அசத்துகிறாராம் மாதவன்.

3 இடியட்ஸ் படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ள மாதவன் அடுத்து தீன் பட்டி படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார் மாதவன். மேலும், ஆறு கெட்டப்களிலும் அசத்தியுள்ளாராம்.

ஷாந்தனு பிஸ்வாஸ் என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்துள்ள தனது அனுபவம் குறித்து மாதவன் கூறுகையில்,

காதலுக்கும், காமத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் நபராக இப்படத்தில் எனது கேரக்டர் அமைந்துள்ளது. மிகவும் சவாலான கேரக்டர் இது. எனவே மிக மிக கவனமாக செய்திருக்கிறேன்.

எல்லாமே விரைவாக கைக்கு வந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் இருக்கும் பேராசிரியர் கேரக்டர் எனக்கு. எதற்காககவும் காத்திருக்கும் நிதானம் இந்த கேரக்டருக்குக் கிடையாது. ஆசைப்பட்டவுடன் அது கிடைத்து விட வேண்டும். இதுவரை நான் நடித்திராத பாத்திரம் இது. ஆறு விதமான கெட்டப்களையும் இதற்காக பூண்டுள்ளேன்.

ஒரு கட்டத்தில் ஆளை மயக்கும் இளைஞராக வருகிறேன். ஒரு கட்டத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி வேடம். இன்னொன்றில் அடிதடி ஆசாமி என வித்தியாசப்படுத்தியுள்ளேன் என்கிறார் மாதவன்.

தமிழில் அடுத்த ஹிட் படம் எப்போது மாதவன்..?

Comments

Most Recent