200 New faces in Cheran's 'Adutha Thalaimurai'

http://thatstamil.oneindia.in/img/2010/02/25-cheran200.jpg 

தொடர் தோல்விகளால் சற்றும் மனம் தளராமல் மீண்டும் சினிமாவில் வெற்றிபெறும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குநர் சேரன்.

மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சேரன், அடுத்து தனது இயக்கத்தில் ஒரு படத்தை உருவாக்குகிறார்.

இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லையாம். மாறாக 200 புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். இதற்காக மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்களை நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்து அவர்களுக்கு ஒத்திகை மூலம் பயிற்சியும் தந்து படத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம்.

இதற்கு முந்தைய படமான பொக்கிஷத்துக்கு சேரன் வைத்த செலவு ரூ 8 கோடி. ஆனால், தயாரிப்பாளர் மருத்துவமனையில் சேர்ந்ததுதான் கண்ட பலன்.

எனவே இந்தப் புதிய படத்துக்கு ரூ 4 கோடி இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம் இப்போதைய தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திடம். சேரன் ஹீரோவாக நடிக்கும் யுத்தம் செய் படத்தைத் தயாரிப்பவரும் கல்பாத்தி அகோரம்தான்!

Comments

Most Recent