த்ரிஷாவிற்கு தமிழ் கற்றுக் கொடுத்த கமல்



உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் “யாவரும் கேளிர்”. “தசாவதாரம்” படத்துக்கு பின் இதில் கமல்ஹாசனை இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார். கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஏப்ரலில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. கமலுடன் இதில் உதயநிதி ஸ்டாலினும் நடிப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்ட போது:ஏற்கனவே கமல் நடிக்கவிருந்த “மர்மயோகி” படத்தில் நடிப்பதாக இருந்தது, பிறகு அந்த படம் டிராப் ஆனது. ஆனால் ஒத்திகை பார்க்கும் போது அவருடன் சில காட்சிகள் நடிக்கும் அபூர்வ வாய்ப்பும் கிடைத்தது. அப்போது அவர் எனக்கு தமிழ் கற்றுத்தந்த நாட்கள் மறக்க முடியாது. கமல் சாருடன் நடிப்பதே எனது லட்சியம், இப்போது “யாவரும் கேளிர்” வாய்ப்பு கிடைத்துள்ளது.​ இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் இனி கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ​ தெரியல? இவ்வாறு த்ரிஷா கூறினார்

Comments

Most Recent