ஆர் பி சவுத்திரி தயாரிப்பில் அவர் மகன் ஜீவா நடிப்பதாக இருந்த ரவுத்திரம் படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடிய...
ஆர் பி சவுத்திரி தயாரிப்பில் அவர் மகன் ஜீவா நடிப்பதாக இருந்த ரவுத்திரம் படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.
இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது.
ஆனால் அதற்குள், கோ படத்திலிருந்து சிம்பு விலகிவிட, அந்த ரோலில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகிவிட்டார்.
கடந்த வாரம் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக சீனா போகவிருந்த ஜீவா, விஸா கிடைக்காததால் சென்னையில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சொந்தப் படமான ரவுத்திரத்தை தற்காலிகமாகக் கைவிடுமாறு தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டாராம். எனவே இப்போதைக்கு இந்தப் படம் செய்யும் திட்டமில்லை என்று ஆர்பி சவுத்ரி கூறிவிட்டதாக சூப்பர்குட் வட்டாரம் தெரிவிக்கிறது.
விஷயம் கேள்விப்பட்ட ஹீரோயின் ஸ்ரேயா, ரவுத்திரம் படத்துக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை அப்படியே மலையாளப் படமான போக்கிரிராஜாவுக்கு மாற்றிவிட்டாராம்.
ஜீவா ஹீரோவாக நடித்த இன்னொரு படம் கச்சேரி ஆரம்பம் விரைவில் வெளியாக உள்ளது.
Comments
Post a Comment