Junior NTR getting Rs. 500 cr as dowry!!

ஜூனியர் என்டிஆருக்கு ரூ.500 கோடி வரதட்சணை!?

 http://thatstamil.oneindia.in/img/2010/02/20-lakshmipranathi200.jpg
வரதட்சணை வாங்குவதில் புதிய சரித்திரமே படைக்கிறார் தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர்.

மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமாராவின் பேரன் ஜூனியர் என்டிஆர். தெலுங்கின் முன்னணி நடிகர் இவர்.

மணமகள் பெயர் லட்சுமி பிரணதி. இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகள். லட்சுமி பிரணதியின் தந்தை சீனிவாஸ் பெரிய கோடீஸ்வரராம்.

லட்சுமி பிரணதிக்கு இப்போதுதான் 17 வயதாகிறது. திருமண வயதை எட்டாததால், பால்ய விவாகம் செய்கிறார்கள் என சில அமைப்புகள் புகார் எழுப்ப, திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது

வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு லட்சுமிக்கு திருமண வயது வந்துவிடும் என்பதால், திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளனர் இருவீட்டாரும்.

இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு வரதட்சணையாக ரூ. 500 கோடி வழங்கப்பட உள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியுள்ளது.

வீடுகள், தோட்டங்கள், வணிக வளாகங்கள், பங்கு பத்திரங்கள் என சொத்துக்களாகவும், பணமாகவும் இந்த வரதட்சணை வழங்கப்பட உள்ளதாம்.

ஆந்திராவில் இவ்வளவு பெரிய தொகையை இதுவரை வரதட்சணையாக யாரும் வாங்கியதில்லையாம்.

Comments

Most Recent