'Ko' Shooting without Jeeva in China

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw440.jpg 

கே.வி. ஆனந்த் இயக்கும் 'கோ' பட முதல் ஷெட்யூல் சீனாவில் நடந்து முடிந்துள்ளது. ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடிக்கும் படம் 'கோ'. இதில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இதையடுத்து சீனாவில் ஷூட்டிங் நடத்த அனுமதி பெறப்பட்டது. கடைசி நேரத்தில் படத்திலிருந்து சிம்பு விலகினார். அவருக்கு பதிலாக நடிக்கும் ஜீவாவுக்கு விசா பெற விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விசா கிடைக்கவில்லை.

இதையடுத்து மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்களுடன் முதல் ஷெட்யூலை அங்கு முடிந்து வந்துள்ளார் கே.வி. ஆனந்த். இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இதுபற்றி பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'சீனாவில் புத்தாண்டு விழா நடந்ததால் உடனடியாக ஜீவாவுக்கு விசா கிடைக்கவில்லை. விரைவில் சீனாவில் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளோம்' என்றார்.

Comments

Most Recent