Madhavan acts with Kamal in 'Yavarum Kaelir'

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw450.jpg 

‘யாவரும் கேளிர்’ படத்தில் கமல்ஹாசனுடன் மாதவன் நடிக்கிறார். இருவரும் சேர்ந்து ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்திருந்தனர். இப்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், த்ரிஷா நடிக்கும் படம் ‘யாவரும் கேளிர்’. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். முழு நீள காமெடி கதை படமாக இது உருவாகிறது. ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்தியில் ‘தீன் பத்தி’, ‘தனு வெட்ஸ் மனு’, ‘சன்கிளாஸ்’ படங்களில் மாதவன் நடித்து வருகிறார். ‘குரு என் ஆளு’ படத்துக்கு பின் தமிழில் அவர் நடிக்கும் படமிது.

Comments

Most Recent