பிரபுதேவாவுக்கும் சிம்புவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நயன்தாரா பதில் நயன்தாரா, பிரபுதேவா காதல் தீவிரமாகியுள்ளது. முதல்வருக்கு நடந்த பார...
பிரபுதேவாவுக்கும் சிம்புவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நயன்தாரா பதில்
நயன்தாரா, பிரபுதேவா காதல் தீவிரமாகியுள்ளது. முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் சேர்ந்து நடனம் ஆடினார்கள். காதலர் தினத்தை மை நேம் இஸ் கான் படத்தை பார்த்தும், ஷாப்பிங், விருந்து என கொண்டாடினார்கள். இந்தநிலையில் பிரபுதேவா பற்றி பரபரப்பாக நயன்தாரா பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி: பிரபுதேவாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?
பதில்: பிரபுதேவா ரொம்ப நேர்மையானவர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். சிறந்த மனிதாபிமானி.
கேள்வி: பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வீர்களா?
பதில்: கருத்து சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: காதல் திருமணம் செய்துகொள்வீர்களா? அல்லது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பீர்களா?
பதில்: காதல் திருமணம்.
கேள்வி: காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: காதல் தான் வாழ்க்கை.
கேள்வி: பிரபுதேவாவுக்கும் சிம்புவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பதில்: ஒவ்வொரு மனிதருமே ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.
கேள்வி: உங்களுக்கும் பிரபுதேவாவுக்கும் உள்ள காதல் உண்மையா?
பதில்: கருத்து சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: சினிமாவில் உங்களுக்கு பொருத்தமான ஜோடியார்?
பதில்: அஜீத்
கேள்வி: பிரபுதேவாவுடன் ஒரே மேடையில் ஆடிய அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: மகிழ்ச்சியாகவும், பதட்டமாகவும் இருந்தது.
கேள்வி: சிம்புவுடன் இருந்த தொடர்பு போன்றதுதானா இப்போது பிரபுதேவாவுடன் உள்ள தொடர்பு?
பதில்: கருத்து சொல்ல முடியாது
கேள்வி: அசின், இலியானா, திரிஷா மூவரில் உங்களுக்கு போட்டி யார்?
பதில்: யாரும் இல்லை.
கேள்வி: சிம்புவிடம் உள்ள கெட்ட நடத்தைகள் என்ன?
பதில்: ஒவ்வொரு மனிதரிடமும் நல்ல குணமும் இருக்கும், கெட்ட குணமும் இருக்கும். என்னால் கெட்ட குணங்களை கணிக்க முடியாது.
கேள்வி: இந்திப்படங்களில் நடிப்பீர்களா?
பதில்: இந்திக்கு போகும் எண்ணம் இல்லை. இந்தியில் பிடித்த நடிகர் சல்மான்கான்தான்.
Comments
Post a Comment