Producer council should Apologize to Ajith - Sarath

http://thatstamil.oneindia.in/img/2010/02/25-sara20.jpg 

குற்றாலம்: நடிகர் அஜீத் பிரச்சனையில் தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

குற்றாலத்தில் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் இன்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஜக்குவார் தங்கம்-அஜீத் பிரச்னை, வடிவேல்-சிங்கமுத்து பிரச்னை குறித்து விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அஜீத் பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

வரும் மார்ச் 12ம் தேதி முதல் விடியல் என்ற படத்தில் நடிக்கிறேன். 40 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் சரத்குமார்.

Comments

Most Recent