மனித உறவின் மென்மையான பகுதிகளை தனது படங்களில் பதிவு செய்யும் ராதாமோகனின் புதிய படம் பயணம். அவரது முந்தையப் படங்களைப் போலவே இந்தப் படத்தையு...
மனித உறவின் மென்மையான பகுதிகளை தனது படங்களில் பதிவு செய்யும் ராதாமோகனின் புதிய படம் பயணம். அவரது முந்தையப் படங்களைப் போலவே இந்தப் படத்தையும் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது.
மொழி, நியூ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் பிரகாஷ்ராஜின் இயக்கத்தில் இனிது இனிது படத்தை இயக்கியவருமான கே.வி.குகன் பயணத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் கதிர்.
விமானக் கடத்தலை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறார் ராதாமோகன். வழக்கமான அவரது படங்களிலிருந்து இப்படம் மாறுபட்டது. நாகார்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார்.
விமானக் கடத்தல் என்றதும் மேஜர் ரவியின் கந்தகார் படத்துடன் இதை குழப்பி இதுவும் கந்தகாரும் ஒரே சப்ஜெக்ட் என சிலர் அவசர முடிவு எடுக்கின்றனர். அது தவறு. கந்தகாரிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
படத்தின் பெரும்பகுதி விமானதளத்தில் நடக்கிறது. ஆனால் படப்பிடிப்பு நடத்த விமான நிலையத்தில் அனுமதி கிடைப்பது கடினம் என்பதால் திருப்பதி விமான நிலைய அரங்கை ஆந்திரா ராமோஜிராவ் திரைப்பட நகரில் அமைத்துள்ளனர். எண்பது சதவீத படப்பிடிப்பு இங்குதான் நடைபெறுகிறது.
பயணம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக அமையும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment