Sameera Reddy's 'Sleep Walking' disease

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw437.jpg

மீராவுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய்! 
தூக்கத்தில் நடக்கும் நோயால் அவதிபட்டு வந்த சமீரா ரெட்டி, போராடி மீண்டதாகக் குறிப்பிட்டார். தமிழில், ‘வாரணம் ஆயிரம்’, ‘அசல்’ படங்களில் நடித்துள்ளவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: நடிகை சமீதா ஷெட்டியின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொள்ள பெங்களூர் சென்றிருந்தேன். அங்கு ஷில்பா ஷெட்டியும், அவரது அம்மாவும், எனது தூக்கத்தில் நடக்கும் நோய் பற்றி கேட்டார்கள். இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்றேன்.

சென்னை & ஆந்திரா பார்டரில் உள்ள ‘ஒன்னஸ் யுனிவர்சிட்டி’ பற்றி சொன்னார்கள். நான் வேண்டாம் என்றேன். விடவில்லை. கடந்த வாரம் என்னை அங்கு சேர்த்தனர். ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு இப்போது குணமாகிவிட்டேன். இந்தப் பிரச்னை எனக்கு 6 வயதிலிருந்தே இருந்தது. 20 வருடத்துக்குப் பிறகு, இப்போது மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

Comments

Most Recent