யங் சுப்பர் ஸ்ட்டார் சிம்பு, தான் நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தை, சென்னை தேவி திரையரங்கில் தனது ரசிகர்களுடன் இணைந்து, ...
படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த காதல் காட்சிகளை வெகுவாக ரசித்த சிம்புவின் ரசிகர்கள் திரையரங்கில் பலத்த கரகோஷம் எழுப்பி, சிம்புவை மேலும் உற்சாகப்படுத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமை உலகளாவிய ரீதியில் திரைக்கு வந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நிஜமாகவே பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தினை பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீருடன் உதட்டில் ஒரு புன்னகை வெளிவந்தால் அது தான் எமது வெற்றி என இயக்குனர் கௌதம் மேனன், ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
நீங்கள் படத்தை பார்த்து விட்டீர்களா?
ஆம், எனில் கண்ணீர் வந்ததா என கூறுங்கள்
இல்லையெனில் படத்தை பார்த்து விட்டு நீங்களும் கூறுங்களேன்
Comments
Post a Comment