தனக்கு வருகிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று ஷ்ரியா, ரீம்மா மீது கோபமாக இருக்கிறாராம் புன்னகை இளவரசி ஸ்னேகா. ...
தனக்கு வருகிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று ஷ்ரியா, ரீம்மா மீது கோபமாக இருக்கிறாராம் புன்னகை இளவரசி ஸ்னேகா.
ஸ்னேகா தமிழ் சினிமாவின் மறுதலிக்க முடியாத இடத்தைப் பிடித்து ஜம்மென்று அமர்ந்திருக்கிறார். கவர்ச்சிகரமான நாயகிகள் ஒரு பக்கம் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இணையாக ஸ்னேகாவும் அசத்திக் கொண்டுதானிருக்கிறார்.
அவர் நடித்துள்ள பவானி படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு விஜயசாந்திக்குக் கிடைத்ததைப் போல தனக்கும் லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பும் அவரிடம் உள்ளது.
இந்த நேரத்தில் ஸ்னேகாவின் வளர்ச்சியைப் பிடிக்காமல் ஷ்ரியாவும், ரீம்மாவும் கூட்டு சேர்ந்து ஸ்னேகாவுக்குப் போகும் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்க முயற்சிப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
இருவரும் கூட்டணி அமைத்து செயல்படுவதால், ஸ்னேகா சற்று டென்ஷனாக உள்ளாராம். எங்காவது நேரில் பார்த்தால் கூட அவர்களை கண்டு கொள்ளாமல் போய் விடுகிறாராம் ஸ்னேகா.
எனக்கென்று உள்ளது எனக்குதான் வந்து சேரும். அதை யாரும் தட்டிப் பறித்து விட முடியாது என்று நம்பிக்கையுடன் அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் ஸ்னேகா - படு பிசியாக.
Comments
Post a Comment