Summer treat from Kollywood

http://thatstamil.oneindia.in/img/2010/02/23-enthiran-200.jpg
வருகிற மாதங்களில் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய, சுவாரஸ்யமான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன, இந்த கோடை விடுமுறை ஸ்பெஷலாக.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள்தான் கோடம்பாக்கம் பாக்ஸ் ஆபீஸில் மிக முக்கியமானவை. சுமாரான படங்கள் கூட கொஞ்சம் தாக்குப் பிடித்து ஓடிவிடும். காரணம் இந்த மூன்று மாதங்களும் மாணவர்களுக்கு விடுமுறை, மக்களும் விடுமுறைக் கொண்டாட்ட மூடிலிருப்பார்கள்.

விஜய் நடிக்கும் சுறா, விக்ரம்-ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ராவண், ஜெயம் ரவியின் தில்லாலங்கிடி, லிங்குசாமியின் பையா, சிம்பு தேவனின் இயக்கத்தில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்... என பெரிய படங்கள் சம்மர் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இவற்றில் சுறா படத்துக்கு ரிலீஸ் தேதி கூட குறித்தாகிவிட்டது.. ஏப்ரல் 14.

இவற்றைத் தவிர 25க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களும் இந்த கோடையில் திரைக்கு வருகின்றன. இவை அனைத்தும் வெளியானால், இந்த விடுமுறை சீஸனில்தான் அதிகப் படங்கள் ரிலீஸானது என்ற சாதனையைப் படைக்கும் கோலிவுட்.

இவற்றுக்கெல்லாம் சிகம் வைப்பது போல ஒரு படமும் வரவிருக்கிறது. ஆனால் ஒருமாதம் தள்ளி. அது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கியுள்ள எந்திரன்!

Comments

Most Recent