This time Rajini gives a spritual punchline!

 http://thatstamil.oneindia.in/img/2010/02/21-lawrence200.jpg

'தலைவணங்கி உள்ளே வா... கேட்டது கிடைக்கும்'

அம்பத்தூரில் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரர் கோயில்... வாசலில் ஒரு வாசகம் பளிச்சிடுகிறது. அந்த வாசகம்: 'தலை வணங்கி உள்ளே வா கேட்டது கிடைக்கும்..'

-பார்க்கும் படிக்கும் யாரையும் சட்டென ஈர்க்கும் அந்த வாசகத்தை அந்த இடத்தில் எழுதி வைக்கும்படி சொன்னவர்... வேறு யாருமல்ல, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!

ஆவடி-அம்பத்தூர் இடையே அமைந்துள்ள திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் ஏழு கிரவுண்ட் பரப்பளவில் ராகவேந்திரர் சுவாமி பிருந்தாவனம் கோவிலை லாரன்ஸ் கட்டியுள்ளதை அறிந்த ரஜினி, லாரன்ஸைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட அந்த வாசகத்தை லாரன்ஸிடம் சொல்லி, அதை சரியாக நுழைவாயிலில் எழுதும்படி கூறினாராம்.

உடனே அப்படியே செய்தாராம் லாரன்ஸ். பின்னொரு நாள் வந்து நேரில் பார்ப்பதாக ரஜினி தெரிவித்தாராம்.

இந்தக் கோவில் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். வியாழக்கிழமை 4 ஆயிரம் பக்தர்கள் வரை வருகின்றனர். வியாழன் அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

"சினிமாவில் நல்ல நிலைக்கு வந்த பிறகு எனக்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை. ராகவேந்திரருக்கு கோவில் கட்டுவதே என் லட்சியமாக இருந்தது. அதன்படி இந்த கோவிலை கட்டி உள்ளேன். எதிர்காலத்தில் இதேபோல் இன்னும் பல கோவில்கள் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை" என்கிறார லாரன்ஸ்.

Comments

Most Recent