இந்தப் படம் வந்தால் இந்தியாவே புரண்டு படுக்கும் என்று இயக்குனர்கள் தன்னம்பிக்கையுடன் கூறுவது வழக்கம். இப்படி இந்தியாவை தோசை போல் புரட்டிப்...
இந்தப் படம் வந்தால் இந்தியாவே புரண்டு படுக்கும் என்று இயக்குனர்கள் தன்னம்பிக்கையுடன் கூறுவது வழக்கம். இப்படி இந்தியாவை தோசை போல் புரட்டிப்போடப் போகிற படம்தான் வேராகி விழுதாகி.
அப்படி என்ன இந்தப் படத்தில் விசேஷம்?
‘ஒலிம்பிக்கில் சின்னச் சின்ன நாடுகள் கூட பதக்கம் வாங்குகிறது. ஆனால் இந்தியா சில பதக்கங்கள் வாங்கவே சிரமப்படுகிறது. ஜனத்தொகை அடிப்படையில் பார்த்தால் ஐந்து இந்தியனில் ஒருவன் பதக்கம் வாங்க வேண்டும். இது முடியும் (இந்தியாவின் ஜனத்தொகை 100 கோடி என்று வைத்துக் கொண்டால் இருபது கோடி பேர் பதக்கம் வாங்க வேண்டும். ஒலிம்பிக்கில் அவ்வ்வ்...வளவு பதக்கம் இல்லையே பாஸு?) ஆனால் அது சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அது ஏன்? இந்தப் படம் வந்த பிறகு விளையாட்டுத் துறையில் பெரிய மறுமலர்ச்சியே ஏற்படும்’ என்று சிரிக்காமல் சீரியஸாகவே பேசினார் படத்தின் இயக்குனர் மா.ரவிச்சந்திரதுரை.
சவலைப் பிள்ளையாக இருக்கும் ஒருவன் விடாமுயற்சியால் லாங்க் ஜம்ப் சாம்பியனாகிறான், திக்குவாய்காரன் பெரிய பாடகராகிறான். இதெல்லாம் அல்லேலூயா எழுப்புதல் கூட்டத்தில் நடந்த அதிசயமல்ல, இதுதான் வேராகி விழுதாகி படத்தின் கதை.
புல்லரிக்க வைக்கிறீங்களே
Comments
Post a Comment