Vikram's trilingual movie in Tamil, Telugu and Hindi

http://icdn.indiaglitz.com/tamil/news/vikram220210_1.jpg 
ராவண் படத்துக்குப் பிறகு இந்திப் படவுலகம் ஆச்ச‌ரியமுடன் பார்க்கும் நடிகராவார் விக்ரம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. பாலிவுட் நடிகர்கள் விக்ரமின் படங்கள் பார்த்து ஆச்ச‌ரியப்பட்ட சம்பவங்கள் பல நடந்திருக்கிறது. முக்கியமாக சல்மான்கான்.

விக்ரமின் சேது படம் தேரே நாம் என்ற பெய‌ரில் இந்தியில் தயாரானது. விக்ரமின் கதாபாத்திரத்தில் நடித்தவர் சல்மான். படம் ஹிட். அப்போதே அவர் விக்ரமின் நல்ல நண்பர். விக்ரமின் சாமி படம் மும்பையில் நூறு நாட்கள் ஓடியது பல ஸ்டார்களை அதிசயப்பட வைத்தது.

ராவண் படம்தான் விக்ரமின் முதல் நேரடி இந்திப்படம். அதனால் அவரை இந்திப்பட ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ட்ரெய்லர் ஒன்றை உருவாக்கியுள்ளார் மணிரத்னம். இந்தப் படம் வெளிவந்தால் இந்தியில் நடிக்க விக்ரமுக்கு வாய்ப்புகள் வரும் என்பது அனைவ‌ரின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கையின் காரணமாக மோகன் நடராஜன் விக்ரமை வைத்து தயா‌ரிக்கும் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் தயா‌ரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குகிறவர் பூபதி பாண்டியன். ஜோடியாக நடிப்பவர் இலியானா.

விக்ரம் கே. குமார்தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பூபதி பாண்டியனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இயக்குனர் மாற்றப்பட்டதால் முதலில் ஒப்பந்தமான ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம் இருவரும் இந்தப் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை தெலுங்கிலும் தயா‌ரிக்க இருப்பதால் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Comments

Most Recent