Ajith formula 2 race in CM's hand

http://tamil.galatta.com/articles/ajith-race.jpg

நடிகர் அஜீத்துக்கு கார் பந்தயத்தில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்பது நீண்டகால லட்சியமாக இருந்தது. அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு கார்பந்தயங்களில் கலந்துகொண்டார். இடையில் சிலர் அட்வைஸ் செய்ததால் பந்தயங்களில் கலந்துகொள்வதை கைவிட்டு முழு கவனத்தை சினிமாவில் செலுத்தினார்.

ஆனால், சில படங்களுக்குப் பிறகு மீண்டும் கார் பந்தய ஆசை வந்துவிட்டது. தற்போது ஐரோப்பா நாடுகளில் நடக்கவிருக்கும் ஃபார்முலா-2 பந்தயத்தில் கலந்துகொள்ள தீர்மானித்த அஜித், அதில் கலந்துகொள்ளத் தேவைப்படும் தொகையான 23 கோடி ரூபாயை கொடுத்து உதவும்படி தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்த முதல்வர், தொகை வழங்க ஆலோசித்து வருவதால் ஃபார்முலா-2 வில் கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

Comments

Most Recent