All rumors - Shruthi Hassan

http://img1.chakpak.com/se_images/12190_-1_564_none/siddharth-wallpaper.jpg
‘பாய்ஸ்’ சித்தார்த்துடன் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி கமல்ஹாசன். இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி ஸ்ருதி கூறியதாவது: சித்தார்த்துடன் தெலுங்கில் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறேன். வேலை சம்பந்தமான நட்புதான் எங்களுக்குள். மற்றபடி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் எதுவுமே இல்லை. சித்தார்த் நல்ல நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பதில் சந்தோஷம். மற்றபடி எல்லாமே புரளிதான்.
தமிழில் சூர்யா ஜோடியாக அறிமுகமாக உள்ளேன். ஏ.ஆர். முருகதாஸ்,

திறமையான இயக்குனர். அவரது படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாவது பெரிய விஷயமாக கருதுகிறேன். இந்தியிலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. அப்பாவின் செல்ல மகள் நான். அதனால் அம்மாவை விட்டு விலகி இருப்பதாகச் சொல்கிறார்கள். என்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் அம்மாதான். அதனால் அவருக்கு எப்போதுமே நான் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதி கூறினார்.

Comments

Most Recent