Anuya Item song in 'Nanjupuram'

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw556.jpg

‘நஞ்சுபுரம்’ படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் அனுயா. ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘நஞ்சுபுரம்’. பாம்பு பயத்தில் வாழும் ஒரு கிராமத்தை பற்றிய இக்கதையை திரைக்கதை எழுதி இயக்குகிறார் சார்லஸ். இசை அமைத்து ஹீரோவாக நடிக்கிறார் ராகவ். ‘சிவா மனசுல சக்தி’, ‘மதுரை சம்பவம்’ படங்களில் நடித்துள்ள அனுயா, இதில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஹீரோ ராகவ்வுடன் அவர் ஆடிய காட்சி சென்னையில் உள்ள பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இதுபற்றி அனுயாவிடம் கேட்டபோது, ‘ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ராகவ் நண்பரானார். அவர் ‘நஞ்சு புரம்’ கதையை சொன்னார். பிடித்திருந்தது. அதனால், இப்படத்தில் நடனம் ஆட ஒப்புக்கொண்டேன்’’ என்றார் அனுயா.

Comments

Most Recent