பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோவை சன் டிவி வெளியிட்டது. இப்புகாரில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சித...
பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த வீடியோவை சன் டிவி வெளியிட்டது.
இப்புகாரில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா 1992 ம் ஆண்டு பாரதிராஜாவின் "நாடோடி தென்றல்" படத்தில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இவர் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்களில் நாடோடி தென்றல், அமைதிப்படை, சின்ன வாத்தியார் மற்றும் ஜெய்ஹிந்த் போன்றவை குறிப்பிடத்தக்கது.
ராணுவ அதிகாரியான ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ரஞ்சிதா சில காலம் திரையுலகை விட்டு விலகியிருந்தார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக சில திரைப்படங்களில் நடித்து வந்தார். வில்லு படத்தில் தந்தை விஜய் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ரஞ்சிதா கணவரை பிரிந்து விட்டார் என்ற செய்தி வந்த போது அதை திட்டவட்டமாக மறுத்தார் என்பது நினைவு கூறவேண்டிய ஒன்று.
கலைஞர் டிவியில் பாரதிராஜாவின் இயக்கத்தில் ஒளிபரப்பாகிவரும் 'தெற்கத்தி பொண்ணு' தொடரில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ரஞ்சிதா தான். இவர் விலகிய பின்னரே அந்த பாத்திரத்தில் நடிகை புவனேஸ்வரி நடித்து வந்தார். புவனேஸ்வரியும் கடந்த ஆண்டு விபச்சார வழக்கில் கைதானது நினைவிருக்கலாம்.
எது எப்படியோ பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு' தொடரில் உள்ள நடிகைகள் மட்டும் ஒருவர் ஒருவராக தொடர்ந்து விபச்சார புகார்களில் சிக்குவது சற்றே வருந்ததக்கது.
Comments
Post a Comment