தெலுங்கில் ஜெனிலியா நடித்த ‘ரெடி’ படம், முதலில் கன்னடத்தில் ரீமேக் ஆனது. இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. திரைக்கதை, வசனம் எழுதி மித்ரன் ஜவ...
தெலுங்கில் ஜெனிலியா நடித்த ‘ரெடி’ படம், முதலில் கன்னடத்தில் ரீமேக் ஆனது. இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. திரைக்கதை, வசனம் எழுதி மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். பாலாஜி ஸ்டுடியோஸ் சார்பில் மோகன் அப்பாராவ், ரமேஷ் தாண்ட்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ‘உத்தமபுத்திரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் ஹீரோ. ஜோடி ஜெனிலியா. முக்கிய வேடங்களில் பாக்யராஜ், விவேக், கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, மயில்சாமி, ஆர்.சுந்தர்ராஜன், ஆர்த்தி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பாலசுப்ரமணியெம். இசை, விஜய் ஆண்டனி.
Comments
Post a Comment