Freida denies Bond-girl offer

http://thatstamil.oneindia.in/img/2010/03/23-freida200.jpg
புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் டேனியல் கிரெய்க் ஜோடியாக நான் நடிப்பதாக வரும் செய்திகள் தவறானவை என்று மறுத்துள்ளார் பரீதா பின்டோ.

ஸ்லம்டாக் மில்லினேர் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேசப் புகழை குறுகிய காலத்தில் பெற்றவர் பரீதா பின்டோ. இதைத் தொடர்ந்து அவருக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. இப்போது மூன்று ஹாலிவுட் படங்களில் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில், டேனியல் கிரெய்க் நடிக்கும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பரீதா நாயகியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பரீதாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஜேம்ஸ்பாண்ட் பட இயக்குநர் சாம் மெண்டிஸ் பரீதாவை தொடர்பு கொள்ளவில்லை. படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தருவதாகவும் கூறவில்லை.

இப்போது பரீதா, மிரால், யு வில் மீட் எ டால் டார்க் ஸ்ட்ரேஞ்சர், டான் ஆப் வார் ஆகிய படங்களில் மட்டுமே நடிக்கிறார்" என்றார்.

Comments

Most Recent