Ganesh Venkatraman feels worth acting with senior actors

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-630.jpg
‘அபியும் நானும்’ படத்தில் த்ரிஷா ஜோடியாக அறிமுகம் ஆனவர் கணேஷ் வெங்கட்ராமன். அடுத்து, ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் நடித்தார்.
அவர் கூறியதாவது: சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடினேன். வயது என்ன எனக் கேட்கிறார்கள். அது வெறும் நம்பர்தான். அதில் நம்பிக்கையில்லை. மனம் இளமையாக இருக்கும் வரை எல்லோருமே இளைஞர்கள்தான்.

இதுவரை காதலில் விழவில்லை. எனக்கான பெண்ணை தேடி வருகிறேன். அதே நேரம் இப்போதைக்கு சினிமாதான் எல்லாமே. ‘முறியடி’ படத்தில் சத்யராஜுடன் நடிக்கிறேன். இது அரசியல் சம்பந்தமான த்ரில்லர் கதை. இந்தி பட இயக்குனர் விக்ரம் பட் தயாரிக்கும் தமிழ்ப் படத்திலும் நடிக்க உள்ளேன். மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘கேசனோவா’ படம் உள்ளது. பிரகாஷ்ராஜ், மோகன்லால், சத்யராஜ் என சீனியர்களுடன் நடிப்பது சந்தோஷம். அவர்கள் மூலம் நடிப்பு சம்பந்தமான நிறைய விஷயங்களை கற்கிறேன். அது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வாறு கணேஷ் கூறினார்.

Comments

Most Recent