அர்ஜுன், மம்முட்டி "கோகுலம்', "பாரதி கண்ணம்மா', "மறுமலர்ச்சி', "புதுமைப்பித்தன்' உள்ளிட்ட தரமான படங்களைத...
அர்ஜுன், மம்முட்டி
"கோகுலம்', "பாரதி கண்ணம்மா', "மறுமலர்ச்சி', "புதுமைப்பித்தன்' உள்ளிட்ட தரமான படங்களைத் தயாரித்த ஹென்றியின் புதிய தயாரிப்பு "வந்தேமாதரம்'. மம்முட்டி, அர்ஜுன், சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ரீ ரிக்கார்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தைப் பற்றி கேட்டபோது...""தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு முதலில் "அறுவடை' என்ற பெயரை வைத்திருந்தோம். பிறகு "வந்தேமாதரம்' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளோம். அரவிந்த்ராஜ் படத்தை இயக்கியுள்ளார்.இதில் விவசாயிகளின் பிரச்னைகளையும் தீவிரவாதப் பிரச்னைகளையும் பற்றி அலசி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வைக் கூறியிருக்கிறோம். மம்முட்டியும் அர்ஜுனும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். சினேகா பெண் விமானியாக நடித்துள்ளார்.படத்தில் இடம்பெறும் அதி நவீன மருத்துவமனை மற்றும் சிறைச்சாலைக் காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும். படத்தின் பரபரப்பான வசனங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறும்.படத்துக்காக வைரமுத்து எழுதிய "தாய்நாடு...' எனத் தொடங்கும் தேச பக்திப் பாடலை 10 பிரபல பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர். ஜனரஞ்சகப் படங்களுக்கேயுரிய கலை அம்சங்களுடன் தரமான படைப்பாக உருவாகியுள்ள "வந்தேமாதரம்' ஏப்ரல் மாதம் வெளியாகிறது'' என்றார் தயாரிப்பாளர் ஹென்றி. இசை } இமான். பாடல்கள் } வைரமுத்து, நந்தலாலா, சினேகன். ஒளிப்பதிவு } ராஜேஷ்யாதவ், பன்னீர்செல்வம்.
Comments
Post a Comment