கோலிவுட் நாயக்கிகளின் அம்மாக்கள் எப்போதுமோ அலப்பறையான மனுஷிகள்தான். ஒருசில அம்மாக்கள் மட்டுமே அமைதியாக எதிலும் மூக்கை நுழைக்காமால் இருப்பா...
அப்படியொருவரைச் சொல்லவேண்டும் என்றால் நடிகை பத்மப்ரியாவின் அம்மாவைச் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தாலும் கூட அமைதியாக கேராவேனில் இருந்து விடுவார்.ஷாட் எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வாய் பேசமாட்டார். ஆனால் கோலிவுட்டில் அநியாயத்துக்கும் பந்தா பண்ணுகிற ஒரு அம்மா என்றால் அவர் த்ரிஷாவின் அம்மாதான்.
விரும்பினால் படப்பிடிப்புக்கு வருவார். வந்தால் அவ்வளவுதான், அன்று இயக்குனர் எத்தனை காட்சிப்படிமங்கள் (ஹீ...ஹீ...ஷாட் என்பதைத்தான் நம்ம அன்னைத் தமிழ்ல இப்படி மொழிபெயர்த்தோம்...!எப்பூடி?) எடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதை சாதிப்பது கடினம். காரணம் கதாநாயகனோடு த்ரிஷா கடலை போடுகிறாரோ இல்லையோ, அவரது அம்மா மாலை பேக் அப் ஆகிறவரை கடலையில் கின்னஸ் சாதனையே செய்துவிடுவார். கொஞ்சம் ஜொள்ளு நாயகன் என்றால் படம் முடிவதற்குள் பல டின்னர்கள் கிடைக்கும். டின்னருக்கு பின்னர் என்ன..? என்னுல்லாம் கேட்க்கக் கூடாதுப்பா.
ஆக த்ரிஷா அம்மாவின் சமீபத்திய கடலையில் மயங்கிக்கிடப்பவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமாராம். ப்ரியதர்ஷன் இயக்கும் கத்தா மிட்டா படத்தில் திரிஷாதான் கதாநாயகி. அன்பர் அக்ஷயின் அன்பு, பாசம் பற்றி கேள்விப்பட்ட அம்மையார். உஷாராக மொத்த படப்பிடிப்புக்கும் கூடவே இருந்து விட்டார்.
அமையாரின் குட்ஷெபர்டு ஆங்கிலம், த்ரிஷா எல்லாம் போடுவது காஸ்டுமே இல்லை என்று சொல்லும் விதமாக இவர் போடும் அதிரடி காஸ்டூயூம்களை பார்த்து அதிர்ந்த அக்ஷய் தென்னிந்தியாவிலிருந்து இப்படியொரு காஸ்மோபொலிட்டன் அம்மாவா! என்று குஜாலாவாக அரட்டையை ஆரம்பித்தவர் இப்போது ஒன்றுக்குள் ஒன்றாக நெருக்கமாகி விட்டாராம்.
இப்போது அக்ஷய் –அம்மையார் இடையே அப்படியோரு பினைப்பு என்கிறார்கள் நம்பிக்கையான வட்டாரத்தில். தினசரி ஒரு மணி நேரமாவது கடலை போட்டால்தான் எரிந்து விழாமல் இருக்கிறார் என்கிறார்கள் நெருக்கமான வட்டாரத்தில்.
இது ஒருபுறம் இருக்க கமலோடு நட்பு பாராட்ட வேண்டும் என்பது எனது நீண்ட ஆசை என்று மகளிடம் வாஞ்சையோடு சொன்ன அம்மையார் , டோலிவுட்டில் 60 லட்சம் சம்பளம் பெசி ரவிதேஜாவுடன் ‘டான் சீனு’ படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்புக்கொண்ட நிலையில், “உங்கப அடுத்த படத்தில த்ரிஷா கண்டிப்பா இருப்பா! ஆனா கமலோட நடிக்க இந்த வாய்ப்ப விட்டா முடியாது” என்று ரவிதேஜவிடம் தானே பக்குவமாக பேசி சாமதானம் செய்து விட்டு, கமலின் யாவரும் கேளீர் படத்துக்கு கால்ஷீட்டை வாரி வழங்கியிருக்கிறார்களாம் அம்மாவும், பெண்ணும்.
இப்போது த்ரிஷா உதறிய டான் சீனு படவாய்ப்பு ஸ்ரேயா கையில் லட்டு மாதிரி விழுந்திருக்கிறது. 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஸ்ரேயா கண்ணு கால் பதிக்கிறது த்ரிஷா மம்மி புன்னியத்தில். இப்போது யாரும் கேளீர்...யாவரும் நண்பர்கள்... என்ற உலகலாவிய கொள்கையை காப்பாற்ற படப்பிடிப்புக்காக கத்திருக்கிறாராம் அம்மையார்
Comments
Post a Comment