சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் தயாராக இருந்த படம் கச்சேரி ஆரம்பம், ரவுத்திரம். சமீபத்தில் வெளி...
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் தயாராக இருந்த படம் கச்சேரி ஆரம்பம், ரவுத்திரம். சமீபத்தில் வெளியாக இருக்கும் கச்சேரி ஆரம்பம் படத்தின் போதே தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ரவுத்திரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கோ பட இயக்குனர் கே.வி. ஆனந்துக்கும் சிம்புவிற்கும் ஏதோ பிரச்சனை என்றதும், கோ-வில் நுழைய தன்னை தயார்படுத்திக் கொண்ட ஜீவா, நினைத்தது போலவே கோ பட ஹீரோவாகிவிட்டார்.
எனவே ரவுத்திரம் படத்தையும் ஆரம்பித்து டேட்ஸ் பிரச்சனையால் ஆனந்தின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதால் தன் தந்தையிடம் சொல்லி அப்படத்தை தள்ளிவைத்துவிட்டார்.
மேலும், ரவுத்திரம் நல்ல கதை என்பதால் தன் இன்னொரு மகனான 'ஜித்தன்' ரமேஷை வைத்து படத்தை முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் ஆர்.பி. செளத்ரி.
Comments
Post a Comment