டிஸ்னி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான அலைஸ் இன் ஒன்டர்லேண்ட் பிரிமியர் ஷோவில் தன் இளைய மகள் அக்ஷராவுடன் பங்கேற்றார் நடிகர் கமல்ஹாஸன். ...
டிஸ்னி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான அலைஸ் இன் ஒன்டர்லேண்ட் பிரிமியர் ஷோவில் தன் இளைய மகள் அக்ஷராவுடன் பங்கேற்றார் நடிகர் கமல்ஹாஸன்.
சமீபத்தில் டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய படம் அலைஸ் இன் ஒன்டர்லேண்ட். இந்தியாவிலும் வெளியாகியுள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருடன் அவரது இளைய மகள் அக்ஷரா ஹாஸனும் இந்த காட்சியில் கலந்து கொண்டார். கறுப்பு நிறத்தில் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் உடையில் வந்திருந்த அக்ஷராவையே அத்தனை கேமராக்களும் மொய்த்தன.
திரைப்படங்களில் நடிப்பாரா அக்ஷராவும் என்று கமல்ஹாஸனிடம் கேட்டதற்கு, 'நான் என் குழந்தைகளை ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் விருப்பப்படி வாழ அனுமதிக்கிறேன். அனுமதி என்பது கூட தவறு. அவர்களே தங்கள் விருப்பங்களை, தேர்வுகளை முடிவு செய்வார்கள்' என்றார்.
Comments
Post a Comment