உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாஸனின் படத்தில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் மனு...
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாஸனின் படத்தில் முதல் முறையாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் மனுஷ் நந்தன்.
இவர் ரவி கே சந்திரன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். சமீபத்தில் வெளியான மை நேம் ஈஸ் கான் படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பத்திரிகையாளர் ஞாநியின் மகன்தான் இந்த மனுஷ் நந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இன்னொருவரும் முதல்முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.
ஏ ஆர் ரஹ்மான்தான் இசையமைப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் பெயர் வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு யாவரும் கேளிர் என்று தலைப்பு சூட்டியிருந்தார்கள். இதனை சமீபத்தில் கமல்ஹாஸனே உறுதிப்படுத்தியிருந்தார்.
இப்போது அந்தத் தலைப்பு மாறக்கூடும் என்கிறது கமல் வட்டாரம். காருண்யம் என்ற தலைப்பையும் பதிவு செய்துள்ளது உதயநிதி ஸ்டாலின் தரப்பு.
கமலுடன் த்ரிஷா-மாதவன் நடிக்கும் படம் இது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
Comments
Post a Comment