ஆவாரா... லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்திருக்கும் படம். என்ன குழப்பமாக இருக்கிறதா? பையா படத்தின் தெலுங்கு பதிப்பின் பெயர்...

ஆவாரா... லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்திருக்கும் படம். என்ன குழப்பமாக இருக்கிறதா? பையா படத்தின் தெலுங்கு பதிப்பின் பெயர்தான் ஆவாரா.
ஏப்ரல் 2ஆம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை பையா வெளியாகிறது. கார்த்தி, தமன்னா, மிலிந்த் சோமன் நடித்திருக்கும் இந்தப் படத்தை தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். தெலுங்குப் பதிப்புக்கு ஆவாரா என்று பெயர் வைத்துள்ளனர்.
பையா வெளியாகும் அதேநாள் ஆவாராவையும் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சிக்கல். ஏப்ரல் 2 ஆவாரா வெளியாகவில்லை.
இரண்டு வாரங்கள் தள்ளியே பையாவின் தெலுங்குப் பதிப்பு வெளியாகிறது. இந்த தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
Comments
Post a Comment