Kollywood Kisu Kisu - Gossip of the day

 http://lovvy.files.wordpress.com/2009/03/film-roll1.jpg

விரலு நடிகரு மேல மணியான இயக்குனரு கடுப்புல இருக்காராம்... இருக்காராம்... Ôநவம்பர்ல கால்ஷீட் இருக்குமான்னுதான் என்னோட ஆபிஸ்லேருந்து அவர்கிட்ட கேட்டோம். அதுக்குள்ள என் படத்துல நடிக்கிறேன்னு தகவல் பரப்புறாருÕன்னு நடிகர் பத்தி நெருங்கியவங்ககிட்ட சொல்றாராம்... மணியானவரு சொல்றாராம்... அதனால மணியுடைய அடுத்த படத்துல விரலு நடிக்கிறது
டவுட்தானாம்...
டவுட்தானாம்...

டைரக்டர்களுக்கு காமெடி சீன் பண்ணத் தெரியலங்கிற அர்த்தத்துல சந்தனமான காமெடி கமென்ட் அடிச்சாரு... அடிச்சாரு... அது டைரக்டர்கள் மத்தியில புகைச்சலை ஏற்படுத்தியிருக்காம்... ஏற்படுத்தியிருக்காம்... படம் எடுக்காம சும்மா இருக்கிற டைரக்டருங்கதான் அதிக கோபமா இருக்கிறாங்களாம். இதை சங்கத்துக்கு கொண்டு போயி பிரச்னை பண்ணலாம்னு இருக்கிறாங்களாம்... இருக்கிறாங்களாம்...

உலக நாயகனோட மகள், மும்பையில தனியா அபார்ட்மென்ட்ல வசிக்கிறாரு. பாலிவுட்ல நடிக்க வாய்ப்பு வரல. அதனால இசை வாய்ப்பாவது கிடைக்கும்னு நம்பிக்கையில இருக்காராம். அதுக்கான முயற்சியிலேயும் இறங்கி இருக்காராம்... இருக்காராம்... இதுக்கிடையில மும்பையிலேயே இருக்கிற தாய்க்குலத்தை பார்க்க மகள் இதுவரைக்கும் போகலையாம்... போகலையாம்...

Comments

Most Recent